நான்கு வருஷத்தில் முதல் ‘டக்-அவுட்’: மீண்டும் ஸ்மித்தை வெளியேற்றிய அஸ்வின்!

26 December 2020, 12:45 pm
ashwin - smith - updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் அஸ்வின் சுழலில் சிக்கினார். இதன் மூலம் 4 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக டக் அவுட்டானார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடக்கிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, இந்திய பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 195 ரன்களுக்கு சுருண்டது.

இப்போட்டியில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சுழலில் சிக்கினார். இதன் மூலம் இந்த தொடரில் இரண்டாவது முறையாக அஸ்வின் பந்தில் வெளியேறினார் ஸ்மித். அடிலெய்டு டெஸ்டில் ஸ்மித்தை 1 ரன்னில் அவுட்டாக்கிய அஸ்வின் இம்முறை அவரை டக் அவுட்டாக்கினார்.

இதன் மூலம் நான்கு ஆண்டுக்குப் பின் ஸ்மித் டெஸ்ட் அரங்கில் முதல் முறையாக டக் அவுட்டானார். சுமார் 52 டெஸ்ட் இன்னிங்ஸ்களுக்கு பிறகு, ஸ்மித் இந்த மோசமான சாதனையைப் படைத்தார். மேலும் 2014க்கு பின் மெலோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஸ்மித் 4 சதங்களைப் பதிவு செய்துள்ளார். அதில் இந்திய அணிக்கு எதிராக அதிகபட்சமாக 192 ரன்கள் விளாசியுள்ளார்.

இந்திய அணி சார்பாக வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட் சாய்த்தார். அஸ்வின் 3 விக்கெட், அறிமுக வீரர் சிராஜ் 2 விக்கெட் சாய்த்தார். ஆஸ்திரேலியா அணி சார்பாக லபுஷக்னே அதிகபட்சமாக 48 ரன்களும், ஹெட் 38 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடி அதிக முன்னிலை பெறும்பட்சத்தில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகும்.

Views: - 25

0

0