இது இப்படியே ரொம்ப நாள் நீடிச்சா அவ்வளவு தான்… சீக்கிரம் எதாவது பண்ணுங்க: கதறும் ஆஸி வீரர்!

27 January 2021, 7:04 pm
australia cricket - updatenews360
Quick Share

தொடர்ச்சியாக இதே போல பயோ பபுள் முறை பின்பற்றப்பட்டால் கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் சிக்கல் தான் என ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் அணி கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் சுமார் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையமாக கருதப்படும் பயோ பபுள் முறையில் தான் அந்த தொடர் முழுவதும் பங்கேற்க வேண்டும் என்ற சூழலும் தற்போது உள்ளது.

இது வீரர்களின் மனநிலையை பெரிய அளவில் சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் இதே முறை நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றும் இதுகுறித்து யோசித்து மாற்று வழியை விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒரு நாள் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். கடந்த 9 மாதங்களாக பெரும்பாலான நாட்களை தனிமைப்படுத்த படுவதில்லை கழித்துள்ளார் பின்ச். இது வீரர்களின் மனநிலையை சோதிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பின்ச் கூறுகையில், “நான் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மாதத்தின் பெரும்பாலான நாட்கள் அதாவது 20 அல்லது 21 நாட்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் தான் இருந்துள்ளேன். இந்த கோவிட் பாதுகாப்பு முறையை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாது. நிச்சயமாக இது குறித்து யோசிக்க வேண்டியது மிகவும் அவசியம். வீரர்களின் மனநிலையை மற்றும் ஆரோக்கியம் அவசியம் என்பதால் இதுபோன்ற பாதுகாப்பு முறைகள் அவர்களை மிகவும் சோதிக்கிறது.நீங்கள் குடும்பத்தை விட்டு நீண்ட தொலைவில் இருக்கும் பொழுது, மேலும் குடும்பத்தாரும் உங்களுடன் பயணிக்க முடியாத நிலை உள்ளது என்பதால் இது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது. இது தனிமையாக உள்ள வீரர்களுக்கும் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் உள்ளவர்களுக்கும் வித்தியாசப்படுகிறது. இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு இதற்கான தீர்வு விரைவில் காணப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார்.

Views: - 0

0

0