இந்த முறை தப்பாத கம்பீரின் கணிப்பு… பேருலயே ரசிகர்களை கவர்ந்த இளம்வீரர்… தலைநிமிர்ந்த லக்னோ ஜெயன்ட்…!!

Author: Babu Lakshmanan
28 March 2022, 10:17 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோவைச் சேர்ந்த இளம்வீரர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 4வது ஆட்டம் இன்று மும்பையில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

முகமது ஷமி வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரன் எதுவுமின்றி லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, டிகாக் (7), மணீஷ் பாண்டே (6) ஆகியோரின் விக்கெட்டுக்களையும் ஷமி அடுத்தடுத்து வீழ்த்தினார். லீவிஷும் (10) அவுட்டனார். இதனால், 29 ரன்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இதைத் தொடர்ந்து, தீபக் ஹுடாவுடன் இளம்வீரர் பதோனி 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடியதுடன், அதிரடியும் காட்டத் தொடங்கினார். இதனால், லக்னோ அணி சரிவில் இருந்து மீண்டது. தீபக் ஹுடா அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் விளையாடிய இளம் வீரர் பதோனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசிய ஒரே ஓவரில் 15 ரன்களை விளாசினார் பதோனி. அவரும் 54 ரன்கள் விளாசி கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

வெறும் 22 வயதேயான பதோனி, அறிமுகமான முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் அறிமுகப் போட்டியிலேயே அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

Gautam-Gambhir- updatenews360

டெல்லியைச் சேர்ந்த பதோனியை ஏலத்தில் எடுக்க கம்பீர்தான் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், பல கணிப்புகள் தவறினாலும், இந்த முறை சரியானதாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Views: - 1110

0

0