சென்னை – மும்பை போட்டியில்…. யாருக்கு வெற்றி வாய்ப்பு…? அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரங்கள்..!

19 September 2020, 2:32 pm
MI - csk 2- updatenews360
Quick Share

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அபுதாபியில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் இருந்தாலும், சென்னை – மும்பை அணிகளுக்கு இடையில் நடக்கும் போட்டிக்கு ரசிகர்களின் ஆதரவு எப்பவுமே அதிகம். அதுவும், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவது போன்ற உணர்வுடன் போட்டியை கண்டு களிப்பார்கள்.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளும் நல்ல வலுவான வீரர்களைக் கொண்டுள்ளதுடன், சமபலத்துடன் திகழ்கிறது. போட்டியின் இறுதி பந்தில் கூட வெற்றியை மாற்றும் திறமைகளை உள்ளடக்கியுள்ளன. பேட்டிங்கில் சென்னையில் தோனி மீதும், மும்பையில் ரோகித் சர்மாவின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருவரும் அணியை வழிநடத்துவதிலும் சளைத்தவர்களல்ல. தோனி தலைமையில் சென்னை 3 முறையும், ரோகித் சர்மா தலைமையில் மும்பை 4 முறையும் கோப்பையை வென்றுள்ளன.

MI - csk 3- updatenews360

கடந்த சீசனில் சென்னைக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள மும்பை அணிக்கே, இந்தப் போட்டியிலும் வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளது.

காரணம், சென்னை அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, சென்னை அணியின் முக்கிய பேட்ஸ்மென்களாக இருக்கும, ஷேன் வாட்சன், ராயுடு,கேதர் ஜாதவ் மற்றும் முரளி விஜய் ஆகியோருக்கு வலை பயிற்சி அனுபவம் மட்டுமே தற்போது உள்ளது. அவர்கள் சர்வதேச போட்டிகளோ அல்லது வேறு போட்டிகளிலேயே விளையாடி, நீண்ட காலம் ஆகிவிட்டது. சென்னையின் கேப்டன் தோனியும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 435 நாட்களை கடந்து விட்டது. வெறும் வலைபயிற்சி அனுபவத்தை வைத்துக் கொண்டு களமிறங்கும் சென்னை அணிக்கு, ஆரம்பத்தில் சற்று சறுக்கலை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.

Chennai-Super-Kings-CSK-Strengths-and-Weakness-for-IPL-2020-800x445

மும்பை அணியை பொறுத்தவரையில் டி காக் அண்மையில் ஆடியது வரை நல்ல ஃபார்மில் உள்ளார். காலுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ள ஹர்திக் பாண்டியாவும் தற்போது பயிற்சியின் போது பந்துகளை எந்த பதற்றமும் இல்லாமல் எதிர்கொள்கிறார். அதோடு, பெரிய ஷாட்டுகளை அசால்ட்டாக அடிக்கிறார். மேலும், அந்த அணியின் டால் மேன் பொல்லார்டும் கரீபியன் லீக்கில் விளையாடிய ஃபார்முடன் ஐபிஎல்லில் களமிறங்குகிறார். அதோடு, ரோகித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் உள்ளிட்டோர் என வலிமையான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. எனவே, பேட்டிங்கை பொறுத்தவையில் சென்னையை விட மும்பையே பலமாக இருப்பதாக தெரிகிறது.

MI- updatenews360

அதேபோல, பந்து வீச்சிலும், பும்ரா, டிரெண்ட் போல்ட், குல்ட்டர்நைல் உள்ளிட்ட சர்வதேச வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. சென்னையில், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் ஆகியோர், பும்ரா, போல்ட் ஆகியோரின் அனுபவத்திற்கு ஈடுகொடுக்க முடியாது.

எப்படிபட்ட வீரர்களை கொண்டிருந்தாலும், அன்றைய தினம் யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பது களத்தில் இறங்கும் போதுதான் தெரியும் என்றாலும், அணிகளின் பலத்தை பொறுத்த வரையில் மும்பையே வலுவாக உள்ளது.

Views: - 10

0

0