‘திரும்பி வந்துட்டேனு சொல்லு’ : ரஜினி பாணியில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சென்னை அணி!!

Author: Udayaraman
4 October 2020, 11:18 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வால் வழக்கம் போல, நல்ல தொடக்கத்தை அனைத்தும் கொடுத்தனர். அகர்வால் 26 ரன்னில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் ராகுல் (63) பொறுப்பாக ஆடி அரைசதம் விளாசினார். மந்தீப் (27), பூரண் (33) ரன்கள் குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்கள் சேர்த்தது.

கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணிக்கு, தொடக்க வீரர்கள் வாட்சன், டூபிளஸிஸ் ஆகியோர் அபாரமாக ஆடினர். இருவரும் ஆரம்பத்தில் இருந்தே அணியின் ரன் வேகத்தை உயர்த்திக் கொண்டே இருந்தனர். இதனால், சென்னை அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. டூபிளசிஸ் 87 ரன்களிடனும், வாட்சன் 83 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சென்னை அணியின் இந்த ஆட்டம், ரசிகர்களிடையே இழந்த நம்பிக்கையை மீட்டுக் கொடுத்துள்ளது.

Views: - 46

0

0