எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்… பஞ்சாப் உடன் இன்று மோதல்

16 April 2021, 10:35 am
Quick Share

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று களமிறங்குகிறது.

இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் 8வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் தங்களின் முதல் போட்டியில் வெவ்வேறுவிதமான முடிவுகளை எதிர்கொண்டது.

முக்கியப்பங்கு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான அதிக ஸ்கோர்கள் அடிக்கப்பட்ட போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. மும்பையின் வான்கடே மைதானத்தில் பனியின் பாதிப்பு முக்கியப்பங்கு வகிப்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்யவே தீர்மானிக்கும்.

எழுச்சி தேவை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த முறை மிடில் ஆர்டரில் சுஏஷ் ரெய்னா, மொயின் அலி, சாம் கரண், ரவிந்திர ஜடேஜா மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் கைகொடுத்து அணியின் இறுதி ஸ்கோர் 188 ரன்கள் என்ற நிலையை எட்ட உதவினர். ஆனால் துவக்க வீரர்களான ருதுராஜ் மற்றும் டுபிளசி மற்றும் கேப்டன் தோனி ஏமாற்றினர். இதனால் இன்று இவர்கள் எழுச்சிபெறும் பட்சத்தில், எதிரணிக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்கலாம்.

தலைவலி
சென்னை அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பதே அந்த அணியின் பவுலிங் வரிசை தான். பிரித்வி ஷா, ஷிகர் தவான் கூட்டணியை சென்னை அணியின் பவுலர்களான தீபக் சஹார், சாம் கரண், சார்துல் தாகூர் , ஜடேஜா, மொயின் அலி ஆகியோர் ரன்களையும் வாரி வழங்கினர். இதனால் இன்று விரைவாக விக்கெட் வீழ்த்த முயற்சித்தால் நல்லது.

ஜஸ்ட் மிஸ்
மறுபுறம் பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நுழிலையில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணிக்கு ராகுல், கிறிஸ் கெயில், தீபக் கூடா மிரட்டல் பார்மில் இருப்பது பலம். ஆனால் பேட்டிங்கில் பஞ்சாப் அணியின் வரிசை பலமாக பார்க்கப்பட்டாலும், அந்த அணியின் பவுலிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போலவே பலவீனமாக உள்ளது.

ஆனால் கடைசி நேரத்தில் அந்த அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான அர்ஸ்தீப் சிங் பஞ்சாப் அணியை தோல்வியில் இருந்து காத்தார். கடைசி ஓவரில் அந்த அணிக்காக 13 ரன்களை ராஜஸ்தான் அணி எட்டவிடாமல் தடுத்தார். முகமது ஷமி ஓரளவு கைகொடுத்தார். ஆனால் சுமார் 22 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஜெய் ரிச்சர்ட்சன் மற்றும் மெரிடித் ஆகியோர் ரன்களை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

Views: - 28

1

0