‘வேட்டைக்கு நாங்க ரெடி நீங்க ரெடியா‘? : டிவிட்டரில் டிரெண்டான சி.எஸ்.கே. வீரர்!!

13 September 2020, 1:02 pm
Imran Tahir- Updatenews360
Quick Share

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் இம்ரான் தாஹீர் ஐபிஎல் போட்டி குறித்து டிவிட்டரில் பதிவிட்ட கருத்து டிரொண்டாகி வருகிறது.

சோகத்தில் இருந்த கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகமூட்ட ஐபிஎல் போட்டி ஆரம்பமாக உள்ளது. வரும் 19ஆம் தேதி துபாயில் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதுகிறது.

முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை அணியின் வீரர் இம்ரான் தாஹீர் அவரது டிவிட்டர் பக்கத்தில் ஐபிஎல் தொடர் ஆரம்பவமாவது குறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள அவர், என் இனிய தமிழ் மக்களே, தஞ்சமடைந்தேன் அன்பு இல்லத்தில், நாங்கள் வேட்டை க்கு தயார் நீங்கள் ஆட்டத்தை காணத்தயாரா? எடுடா வண்டிய போடுடா விசில என்று பதிவிட்டுள்ளார். டங்க்லிஷ் வார்த்தையில் பதிவிட்டுள்ள அவரது டிவிட்டர் பதிவு டிரெண்டாகி வருகிறது.

Views: - 17

0

0