“தினக்கூலிகளின் வாழ்க்கை மிகவும் கவலைக்கிடத்தில் உள்ளது” – வாசிம் ஜாபர் அதிரடி…!

26 March 2020, 6:06 pm
Quick Share

சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸால் இந்தியா உட்பட பல நாடுகளில் பிணங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையிலிருந்து இந்தியாவை காக்க பிரதமர் மோடி இந்திய மக்களை அடுத்த 21 நாட்களுக்கு ஊடரங்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இந்த விதியினை மீறினால் கடும் தண்டனைக்கு உள்ளாவீர்கள் என்று பல மாநிலங்கள் அறிவித்திருந்தது.


கடந்த வாரத்தில் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுப்பெற்றவர் வாசிம் ஜாபர். இவர் ரஞ்சி போட்டிகளின் வரலாற்றிலேயே அதிக ரன்கள் எடுத்தவர் ஆவார். இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவர் தற்போது இந்தியாவிலும் உலகிலும் கொரோனாவால் நிலவிவரும் அவலநிலையைப் பற்றி அவரது கருத்தினை வெளியிட்டுள்ளார்.


“இதுப்போன்ற ஒரு விஷயம் 1975 ஆம் ஆண்டு போரின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது. ஆனால் ஒரு நோயினால் ஊரடங்கை அமல் படுத்தியது இதுதான் முதல் முறை. இது ஆச்சரியத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தினக்கூலிகளின் வாழ்க்கை மிகவும் கவலைக்கிடத்தில் உள்ளது.” என்று அவர் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.