ராகுல், மாயங்க் அதிரடி… கடைசி நேரத்தில் எழுச்சி பெற்ற பவுலர்கள்: டெல்லி அணிக்கு 196 ரன்கள் இலக்கு!

18 April 2021, 9:17 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டியில் ராகுல் மாயங்க் அகர்வால் ஆகியோர் அதிரடி அரைசதம் அடித்தனர். கடைசி நேரத்தில் டெல்லி பவுலர்கள் எழுச்சி பெற்று ரன்கள் கட்டுப்படுத்த, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது.

இந்தியாவில் 14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடக்கவுள்ள 11வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

டெல்லி அணியில் சொதப்பல் டாம் கரணுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் அணியி ல் இடம் பெற்றார். இதேபோல மெரிவாலாவும் அணியில் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் அஷ்வினுக்கு பதிலாக ஜலஜ் சக்சேனா சேர்க்கப்பட்டார்.

அதிரடி துவக்கம்
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் கே எல் ராகுல், மாயங்க் அகர்வால் ஆகியோர் நல்ல துவக்கம் அளித்தனர். டெல்லி பந்துவீச்சாளர்களை இருவரும் புரட்டி எடுத்தனர். இருவரும் சிக்சர்களும் பவுண்டரிகளாக விளாசினர். இதையடுத்து டெல்லி அணி 12 ஓவர்களில் 120 ரன்களை கடந்தது.

இந்நிலையில் 36 பந்தில் 7 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என 69 ரன்கள் அடித்த நிலையில், மாயங்க் அகர்வால் அவுட்டானார். தொடர்ந்து வந்த கிறிஸ் கெயில் (11) ஏமாற்றினார். பின் வத நிகோலஸ் பூரன் (9) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து கே.எல் ராகுல் 61 ரன்னில் வெளியேற பஞ்சாப் அணியின் ரன் வேகம் அப்படியே படுத்தது. ஒரு கட்டத்தில் சாதாரணமாக 220 ரன்களை எட்டும் நிலையில் இருந்த பஞ்சாப் அணி சரிவைக்கண்டது.

ஷாருக் அதிரடி
கடைசி நேரத்தில் தீபக் கூடா, ஷாருக் கான் ஆகியோர் சேர்ந்து பஞ்சாப் அணிக்காக முடிந்த அளவு ரன்கள் சேர்த்த போதும், டெல்லி பவுலர்கள் சுதாரித்து ரன்களை கட்டுப்படுத்தினர். இதையடுத்து பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் அடித்தது. ஷாருக் கான் (15), கூடா (22) அவுட்டாகாமல் இருந்தனர். டெல்லி அணிக்கு கிறிஸ் வோக்ஸ், மெரிவாலா, ரபாடா, அவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

Views: - 72

0

0