உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப்பில் அறிமுகமாகும் தினேஷ் கார்த்திக்… வீரராக அல்ல…..!!!

4 June 2021, 4:28 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஜுன் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிக்கு ஆயத்தமாகும் விதமாக, அந்த அணி இங்கிலாந்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்தத் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி, இங்கிலாந்திற்கு புறப்பட்டு சென்றுள்ளது. உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நேரில் காண குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆங்கில தொலைக்காட்சியின் வர்ணனையாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பணியாற்ற உள்ளார். இதனால், அவர் விரைவில் இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறார்.

Views: - 377

0

0

Leave a Reply