சூர்யகுமார் யாதவ், ராகுல் சஹாருக்கு வாய்ப்பு: மீண்டும் இங்கிலாந்து அணி பவுலிங்!

Author: Udhayakumar Raman
18 March 2021, 6:36 pm
Quick Share

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது டி-20 போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ராகுல் சஹார் அணியில் சேர்க்கப்பட்டார்.

அணி விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா, கே. எல் .ராகுல், விராட் கோலி(கே), சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், சார்துல் தாகூர், ராகுல் சாஹர்.

இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜாஸ் பட்லர், தாவித் மலான், ஜானி பேர்ஸ்டோவ், இயான் மார்கன் (கே), பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், மார்க் வுட், ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜார்டன், அடில் ரசித்.

Views: - 53

0

0