இனிமேல் இப்படியெல்லாம் செய்யக்கூடாது… தடை, அபராதத்திற்கு பிறகு இந்திய தொடரில் களமிறங்கும் இங்., இளம் வீரர்..!!!

3 July 2021, 6:12 pm
ollie robinson england - updatenews360
Quick Share

8 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட டுவிட்களினால் ஏற்பட்ட சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து வீரர் ஆலி ராபின்சன் இந்தியாவுக்கு எதிரான தொடரில் களமிறங்குகிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடியது. லார்ட்சில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியில் சர்வதேச டெஸ்டில் அறிமுகமான ஒல்லி ராபின்சன் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார்.

இவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக, ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரது இந்த டுவீட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க சில ஆய்வுகளையும் மேற்கொண்டது.

இதையடுத்து, அவரது டுவிட் உறுதி செய்யப்பட்டதால், அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் இருந்தும் நீக்கப்பட்டார். மேலும், அவர் 8 போட்டிகளில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டது.

அதன்படி, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி, விடாலிடி பிளாஸ்ட் டி20 போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்ட தடையின் அடிப்படையில், ராபின்சன் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறார். மேலும், சுமார் 33 லட்சம் அவரிடம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Views: - 461

0

0