கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட சௌரவ் கங்குலி எடுத்த அதிரடியான முடிவு…!

25 March 2020, 12:21 pm
Quick Share

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 21 நாட்களுக்கான ஊடரங்கு ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது. ஏப்ரல் 15 ஆம் தேதிவரை இந்த திட்டம் நீடிப்பதால் அந்நாளில் தொடங்கவிருக்கும் IPL போட்டிகள் ரத்தாகும் அபாயத்தில் உள்ளன. ஆனாலும் இந்த திட்டத்திற்காக இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் தங்குடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் இந்தியாவில் பெங்கால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பிசிசிஐ தலைவரான சௌரவ் கங்குலி ஒரு பாராட்டத்தக்க ஒரு முடிவினை எடுத்துள்ளார். “அரசு அனுமதித்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைத்தர கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பயன்படுத்திக்கொள்ள அனுமதித் தரப்படும்.” என்று கூறியுள்ளார்.


ஈடன் கார்டன்ஸ் இந்தியாவிலுள்ள பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும். அரசு அனுமதித்தால் இது பிற மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும். புதுச்சேரி மாவட்டத்திலுள்ள துடிப்பேட் கிரிக்கெட் மைதானத்தில் ஏற்கனவே கொரோனா நோயாளிகளுக்கு அனுமதியளித்து சிகிச்சையளித்து வருவது குறிப்பிடத்தக்கது

Leave a Reply