டி20 உலகக்கோப்பை… ஒரே குரூப்பில் இந்தியா – பாகிஸ்தான் : அதெப்படி நிகழ்ந்தது தெரியுமா..?

16 July 2021, 7:00 pm
virat - babar - updatenews360
Quick Share

எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்.,17ம் தேதி முதல் நவ.,14ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், நமிபியா, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 8 அணிகள் முதல் சுற்று ஆட்டத்தில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிரும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். அதில், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகளுடன் அந்த அணிகள் சேர்ந்து விளையாடும்.

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளை டி20 தரவரிசையின் அடிப்படையில் இருபிரிவுகளாக ஐசிசி பிரித்துள்ளது. அதன்படி, குரூப் 1ல் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து மற்றும் தகுதிச்சுற்றில் தேர்வாகும் இரு அணிகள் இடம்பெறுகின்றன.

அதேபோல, குரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளோடு, தகுதிச் சுற்றில் தேர்வாகும் அணிகளும் இடம்பெறுகின்றன. அந்தந்த குரூப்பில் இடம்பெற்றுள்ள அணிகள் மாறி மாறி மோதிக் கொள்ளும். இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஒரே சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிக்ள் இடம்பெற்று இருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Views: - 144

0

0

Leave a Reply