ரூட்டின் சதத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து அணி… 2வது இன்னிங்சில் எழுச்சி பெறுமா இந்தியா..?

Author: Babu Lakshmanan
27 August 2021, 11:03 am
root century - updatenews360
Quick Share

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கேப்டன் ஜோ ரூட்டின் அபார சதத்தினால் இங்கிலாந்து அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய பேட்ஸ்மென்களுக்கு இங்கிலாந்து பவுலர்கள் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். ரோகித் சர்மாவை தவிர்த்து பிற வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இறுதியில் இந்திய அணி 78 ரன்களுக்கு சுருண்டது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள், பர்ன்ஸ் (61) மற்றும் ஹமீது (68) சிறப்பாக தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பின்னர் வந்த மலன் (70), கேப்டன் ஜோ ரூட் (121) என ரன்களை குவிக்க, இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் சேர்த்துள்ளது. இதன்மூலம், இந்திய அணியை விட இங்கிலாந்து 345 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

2வது இன்னிங்சில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, ரகானே, புஜாரா ஆகியோர் சிறப்பாக ஆடும் பட்சத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும் அல்லது போட்டியை சமன் செய்ய முடியும்.

Views: - 361

0

0