ஆரம்பம் அமர்க்களம்… கிளைமேக்சில் சொதப்பல் : ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் பெண்கள் அணியும் தோல்வி..!!

Author: Babu
4 August 2021, 5:49 pm
india womens hockey 1- - updatenews360
Quick Share

ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி அணியை தொடர்ந்து பெண்கள் அணியும் அரையிறுதியில் தோல்வியடைந்து ஏமாற்றமளித்தது.

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் முதல்முறையாக இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதனால், இந்திய அணியின் மீது எதிர்பார்ப்பும் அதிகரித்தே காணப்பட்டது.

இந்தநிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி, அர்ஜெண்டினாவை எதிர்த்து விளையாடியது. போட்டி தொடங்கிய 2வது நிமிடத்திலேயே இந்திய அணி கோல் அடித்து அசத்தியது. இதைத் தொடர்ந்து 2வது காலிறுதியில் அர்ஜெண்டினாவும் பதில் கோல் அடித்து சமன் செய்தது.

இதனால், யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருநாட்டு ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது. ஆனால், 3வது காலிறுதியில் அர்ஜெண்டினா மேலும் ஒரு கோலை அடித்து அதிர்ச்சி கொடுத்தது. பின்னர், இரு அணி வீராங்கனைகளும் மேற்கொண்டு கோல் அடிக்காததால், 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதன்மூலம், வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி பிரிட்டனுடன் விளையாட உள்ளது. இதேபோல, ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா – ஜெர்மனிகள் மோதுகின்றன.

இதனிடையே, பெண்கள் ஹாக்கி அணி தோல்வியடைந்த நிலையில், பிரதமர் மோடி வீராங்கனைகளுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

pm modi - updatenews360

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்டனர். இனி வரும் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்,” எனக் கூறியுள்ளார்.

Views: - 309

0

0