தந்தையானார் விராட் கோலி : மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்…!

27 August 2020, 11:22 am
kohli - updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது திறமையினால் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். ரன் மெஷின் என போற்றப்படும் இவர், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார்.

இந்திய அணி விளையாடும் போட்டிகளை விராட் கோலிக்காகவே மைதானத்திற்கு வந்து பார்ப்பார். மேலும், இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களில் வலம் வந்தனர். இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா இருவரும் இத்தாலியில் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், விராட் கோலி தந்தையாகி விட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில், மனைவியுடன் இருக்கும் புகைப்படத்துடன் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், 2021ம் ஆண்டு ஜனவரியில் 3 பேர் வருகிறோம் என பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில், விராட் கோலி நல்ல செய்தி சொல்லியிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத அணியாக இருந்து வரும் பெங்களூரூ அணிக்கு, இதே சந்தோஷத்தில் கோப்பையை வென்று தருவாரா கோலி..? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Views: - 64

0

0