மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: 107 ரன்கள் வித்தியாசத்தில் பாக்., அணியை வீழ்த்தி இந்தியா அபாரம்..!!

Author: Rajesh
6 March 2022, 3:11 pm
Quick Share

மவுன்ட் மாங்கானு: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று, பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிர்தி மந்தனா 52 ரன்கள் குவித்தார். ஆரம்பித்தில் சொதப்பினாலும் ஆட்டம் செல்ல செல்ல வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

குறிப்பாக ஸ்னே ரானா(53), மற்றும் பூஜா வாஸ்ட்ராகர்( 67) கடைசியில் சிறப்பாக விளையாடினர். இதனால், இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து கவுரவமான ஸ்கோரை எட்டியது. இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது.

ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணி 43 ஓவரில் 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனை சிட்ரா அமீன் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், இந்திய மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ராஜேஸ்வரி கெயக்வாட் 4 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். ஜூலன் கோஸ்வாமி, ஸ்நேஹ் ராணா தலா 2 விக்கெட்டையும், தீப்தி சர்மா, மேக்னா சிங் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Views: - 1545

0

0