உஸ்பெகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்த இந்திய பெண்கள் அணி!

6 April 2021, 9:28 am
Quick Share

உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தது.

இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் பங்கேற்றது. இதில் இரு அணிகளுமே போட்டியின் துவக்க முதல் மாறிமாறி கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய போது அதற்கு பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை. இதற்கிடையில் உஸ்பெகிஸ்தான் அணியின் சோயிமோவா போட்டியின் 87வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்ற அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.

உறைந்து விடும் குளிரில் நடந்த இந்த போட்டியில் துவக்கத்தில் உஸ்பெகிஸ்தான் அணி வீராங்கனைகளின் ஆதிக்கம் செலுத்தினர். இதற்கிடையில் இந்திய அணி வீராங்கனைகளான ராஜனா மற்றும் மிட்பீல்டர் வீராங்கனையான சங்கீதா இருவரும் சேர்ந்து கோல் அடிக்கும் வாய்ப்பை உருவாக்கினர். ஆனால் இதை உஸ்பெகிஸ்தான் வீராங்கனைகள் சிறப்பாக தடுக்க இந்த வாய்ப்பு இந்திய அணிக்கு பறிபோனது.

இதற்கிடையில் முதல் பாதியின் கடைசி நிமிடங்களில் உஸ்பெகிஸ்தான் அணி தாக்குதல் ஆட்டத்தை கையாண்டது. இதில் அந்த அணியின் கோல் அடிக்கும் முயற்சியை இந்திய வீராங்கனைகள் தடுக்க அந்த வாய்ப்பு கோலாக மாறாமல் தடுக்கப்பட்டது. இதேபோல இரண்டாவது பகுதியின் முதல் பத்து நிமிடத்தில் இந்திய வீராங்கனையான ராஜனா தாக்குதல் ஆட்டத்தை கையாண்டனர். ஆனால் கோல் தாக்குதலை உஸ்பெகிஸ்தான் வீராங்கனைகள் தடுத்தனர். இதற்கிடையில் போட்டியின் கடைசி நேரத்தில் அதாவது மூன்று நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், உஸ்பெகிஸ்தான் அணியின் சோயிமோவா போட்டியின் 87வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் வாய்ப்பை 25 யார்டு எல்லையிலிருந்து டாப் கார்னரில் கோல் அடித்த உஸ்பெகிஸ்தான் அணி முன்னிலை பெற்றது.

இதற்கு கடைசி வரை இந்திய அணி வீராங்கனைகள் பதிலடி கொடுக்க முடியவில்லை. இந்திய அணி இறுதியில் 0-1 என தோல்வியடைய நேர்ந்தது. இதற்கிடையில் நட்பு ரீதியான இரண்டாவது கால்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி பெலாரஸ் அணியை எதிர்கொள்கிறது.

Views: - 4

0

0