டாப்பிற்கு எகிறிய ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: ‘ஆரஞ்சு கேப்’யாருக்கு… ‘பர்ப்பிள் கேப்’யாருக்கு…!

14 April 2021, 11:30 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 6 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் நம்பர் -1 இடத்திற்கு முன்னேறியது.

இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. இதில் நேற்று வரை ஆறு லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இளம் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்திற்கு முன்னேறியது. சென்னையில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குறைந்த ரன்கள் எடுத்த நிலையிலும் வெற்றியை தங்கள் வசமாக்கி பெங்களூரு அணி முதலிடத்திற்கு முன்னேறியது.

இந்நிலையில் ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த இடத்தில் புள்ளி பட்டியலில் உள்ளது என்பதைப் பார்க்கலாம். தற்போது வரை அனைத்து அணிகளும் ஒரு போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில், பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா அணிகள் மட்டும் இரண்டு போட்டிகளில் பங்கேற்று உள்ளன. இந்நிலையில் பெங்களூரு அணி நம்பர்-1 இடத்திலும், டெல்லி இரண்டாவது இடத்திலும், மும்பை அணி 3-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 4-வது இடத்திலும் உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பங்கேற்ற போட்டியில் தோல்வியைச் சந்தித்து. இதனால் இந்த அணிகள் இதுவரை புள்ளி எதுவும் பெறவில்லை.

இதேபோல அதிக ரன்கள் விளாசிய வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு கேப் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ரானாவிடம் உள்ளது. இவர் இரண்டு போட்டியில் சேர்த்து 137 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் (119) இரண்டாவது இடத்திலும், மணீஷ் பாண்டே (99) மூன்றாவது இடத்திலும், கிளன் மேக்ஸ்வெல் (98) நான்காவது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் (87) 5வது இடத்திலும் உள்ளனர்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களுக்கு வழங்கப்படும் பர்ப்பிள் கேப் ராயல் சாலஞச்ர்ஸ் பெங்களூரு வீரர் ஹர்ஷால் படேல் (7 விக்கெட்) வசம் உள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் கொல்கத்தா அணி வீரரான ஆண்ரே ரசல் (6) பட்டியல் உள்ளார். மூன்றாவது இடத்தில் ரசித் கான் (4) நான்காவது இடத்தில் ராகுல் சஹார் (4), ஐந்தாவது இடத்தில் பாட் கம்மின்ஸ் (3) ஆகியோர் உள்ளனர்.

Views: - 19

0

0