மொகாலியில் தரமான சம்பவம்.. வெயிட்டு காட்டிய மும்பை அணி ; ஐபிஎல் வரலாற்றிலேயே இது முதல்முறை…!!

Author: Babu Lakshmanan
4 May 2023, 8:44 am
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை மும்பை அணி தோற்கடித்தது.

மொகாலியில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப்புக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. ப்ரப்சிம்ரன் 9 ரன்னிலும், தவான் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால், முதல் 10 ஓவர்களில் மும்பை அணியின் கையே ஓங்கியிருந்தது.

இதைத்தொடர்ந்து, ஷார்ட்ஸ் (27) ஓரளவுக்கு சப்போர்ட் கொடுத்த நிலையில், இறுதியில் லிவிங்ஸ்டோன் (82 நாட்அவுட்), ஜிதேஷ் சர்மா (49 நாட் அவுட்) ஆகியோர் மும்பை அணியின் பந்துவீச்சை பொளந்து கட்டினர். இதனால், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் சேர்த்தது.

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு, ரோகித் ஷர்மா இந்த முறையும் ஏமாற்றம் கொடுத்தார். ஆட்டத்தின் 3வது பந்தில் ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர், இஷான் கிஷானுடன் ஜோடி சேர்ந்த க்ரீன் ரன் குவிக்க ஆரம்பித்தார். ஆனால், பவர் பிளேவின் கடைசி பந்தில் க்ரீன் (23) ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து, கைகோர்த்த சூர்யகுமார் யாதவ் – இஷான் கிஷான் ஜோடி அதிரடி காட்டியது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிப்பாதையில் பிரகாசமாக பயணித்தது. ஆனால், இஷான் கிஷான் (75), சூர்யகுமார் யாதவ் (66) அரைசதம் அடித்து ஆட்டமிழந்த நிலையில், வெற்றி பெறப்போவது யார்..? என்ற நிலை ஆட்டத்தில் ஏற்பட்டது.

ஆனால், பஞ்சாப் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, 3 சிக்சர்களை பறக்க விட்டு 19வது ஓவரிலேயே மும்பை அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார் திலக் வர்மா. இதன்மூலம், மும்பை அணி தனது 5வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியது.

அதேவேளையில், 10 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் அணி 5 தோல்விகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு சீசனில் தொடர்ச்சியாக 4 முறை 200 ரன்களுக்கு அதிகமான இலக்குகளை எட்டி பிடித்த அணி என்ற சாதனையை மும்பை அணி பெற்றுள்ளது. குறிப்பாக, வேறு எந்த ஐபிஎல் தொடரிலும் நடக்காத நிகழ்வு இந்த ஐபிஎல் தொடரில் அரங்கேறியுள்ளது. அதாவது, இந்த ஐபிஎல் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்ட இலக்குகளை 5 முறை வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், ரன் சேஸ்களில் இது 4வது அதிகபட்ச ஸ்கோராகும்.

Views: - 311

0

0