திமுகவை காப்பியடித்த காங்கிரஸ்… ரொம்ப மகிழ்ச்சி… அமைச்சர் துரைமுருகன் காட்டிய தாராளம்..!!

Author: Babu Lakshmanan
4 May 2023, 10:45 am
Quick Share

வேலூர் ; தென் பென்னை ஆற்றில் மத்திய அரசு நீர் பங்கீட்டு ஆணையம் அமைக்கும் வரையில் தொடர்ந்து நீதிமன்றத்தை தமிழக அரசு நாடும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் அவசர திமுக பொதுகுழு கூட்டம் அவைத்தலைவர் முகமதுசகி தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வில்வநாதன், அமுலு, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை விரைந்து முடிக்க வேண்டும், திமுக தலைவர் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த தின விழாவில் திரளானோர் கலந்துகொள்வது எனவும், இரண்டு ஆண்டுகள் சாதனை குறித்து மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் பொது கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்டவைகளை வழிமுறைகளை எடுத்து கூறினார்.

பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உச்சநீதிமன்றத்தில் தென் பென்னை ஆற்றில் கர்நாடகா அணை கட்டக்கூடாது என தமிழக அரசு சார்பில் வழக்குதொடர்ந்தோம். மத்திய அரசு நீர் பங்கீட்டு ஆணையம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் மத்திய அரசு அமைக்காததால் உச்சநீதிமன்றம் சென்றோம். காவிரியிலும் மத்திய அரசு இதை தான் கையாண்டது. இதனை உச்சநீதிமன்றத்தில் எடுத்து சொல்வோம். நீர் பங்கீட்டு ஆணையம் அமைக்கும் வரையில் விடமாட்டோம். திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை கர்நாடகாவில் காங்கிரஸ் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது, வரவேற்கதக்கது, என கூறினார்.

Views: - 293

0

0