இன்று International Left Handers Day : ரஸல்லா இது…! வாயை பிளக்க வைக்கும் வீடியோ..!

13 August 2020, 1:48 pm
russell- updatenews360
Quick Share

உலகம் முழுவதும் இன்று சர்வதேச இடதுகை பழக்கம் கொண்டவர்களின் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள அணிகள், இடது கை பேட்ஸ்மென்களில் சிறப்பு குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.

அந்த வகையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரஸல் வலது கை பேட்ஸ்மேன் ஆவார். இவர் கொல்கத்தா அணிக்கு தனது அதிரடி பேட்டிங்கால் பல்வேறு வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், International Left Handers Dayவை முன்னிட்டு, இடது கையில் பேட்டிங் செய்து ரஸல் பந்துகளை எதிர்கொண்டு விளையாடும் வீடியோவை கொல்கத்தா அணி வெளியிட்டுள்ளது. அதில், அவர், அனைத்து பந்துகளையும் சிக்சர்களாக பறக்கவிடுவது, அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோல, பெங்களூரு உள்ளிட்ட அணிகளும் International Left Handers Day குறித்த பதிவுகளை போட்டு வருகின்றன.

இதேபோல, ஐசிசியையும் உலகக்கோப்பை போட்டியின் வீடியோ ஒன்றை போட்டு International Left Handers Dayவை பெருமைப்படுத்தியுள்ளது.

Views: - 7

0

0