சென்னையை சமாளிக்குமா கொல்கத்தா..? பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க வெற்றி பெற்ற வேண்டிய கட்டாயம்…!

29 October 2020, 5:08 pm
kkr vs csk - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் கொல்கத்தா அணி இன்று களமிறங்குகிறது.

நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரையில் 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி, வெறும் 4ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால், அந்த அணியின் பிளே வாய்ப்பு முடிவுக்கு வந்து விட்டது. எனவே, எஞ்சியுள்ள ஆட்டங்களில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இதன் காரணமாக, கடந்த போட்டியில் பெங்களூரூவை வீழ்த்திய நம்பிக்கையில் உள்ளது. அதேவேளையில், சென்னை அணியின் இனி வரும் போட்டிகள், பிற அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அந்த வகையில், இன்று கொல்கத்தாவை எதிர்கொண்டு சென்னை அணி விளையாட இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா உள்ளது.

12 ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி 6ல் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப்பிற்கு தகுதி பெற முடியும். இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேற வேண்டியதுதான். இன்றைய போட்டி கொல்கத்தாவுக்கு வாழ்வா..? சாவா..? ஆட்டம் என்பதால், ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

Views: - 23

0

0