13 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் கிராமத்தில் ஒலித்த இந்திய தேசிய கீதம் : ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா..!!!

Author: Babu Lakshmanan
7 August 2021, 5:59 pm
neeraj chopra - updatenews360
Quick Share

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாக ஈட்டி எறியும் போட்டி நடைபெற்றது. ஆரம்பச் சுற்றில் இருந்து கடைசி வரை இந்தியாவின் நீரஜ் சோப்ராதொடர்ந்து முதல் இடத்திலேயே நீடித்து வந்தார். இதனால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தே காணப்பட்டது.

இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டருடன் முதலிடம் பிடித்தார். கொடுக்கப்பட்ட 6 வாய்ப்புகளில் வேறு யாரும் நீரஜ் சோப்ராவின் தொலைவை கடந்து வீசவில்லை. இதனால், இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். செக்குடியரசின் வேட்லெஜ் மற்றும் வெசேலே முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.

இந்தியா கடைசியாக 2008ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தார். சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார் நீரஜ் சோப்ரா. வெறும் 23 வயதே ஆன இளம் வீரரான சோப்ராவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தியாவே இந்த தருணத்தை கொண்டாடி வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இன்றோடு முடிவடைந்தது. இந்த நிலையில், நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதால் பதக்க பட்டியலில் 20 இடங்கள் முன்னேறி 47வது இடத்தை பிடித்துள்ளது.

முன்னதாக, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் 65 கிலோ ஆடவர் பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார். ‛ரெப்பிசேஜ்’ போட்டியில், பஜ்ரங் புனியா, கஜகஸ்தானின் டவுலெட் நியாஸ் பேகோவை 8 – 0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.

Views: - 839

1

0