6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அசத்தல் வெற்றி!!

Author: kavin kumar
3 October 2021, 11:53 pm
Quick Share

சன் ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான சஹா முதல் ஓவரின் இரண்டு பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து மிகப்பெரும் ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான ஜேசன் ராயும் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் வில்லியம்சன் (26), ப்ரியம் கர்க் (21) மற்றும் அப்துல் சமத் (25) ஆகியோரை தவிர மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெறும் 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் விளையாடிய வெங்கடேஷ் 8 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். அடுத்து விளையாடிய ராகுல் திரிபாதி (7), நிதீஷ் ராணா (25) ரன்களில் வெளியேறினர். கில், 57 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தினேஷ் கார்த்திக் (18), மோர்கன் (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 19.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 119 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Views: - 709

0

0