13 வயதில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாற்று சாதனை: ஜப்பான் வீராங்கனை மோமிஜி நிஷியா அபாரம்..!!

Author: Aarthi
26 July 2021, 1:30 pm
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்கேட்போர்டிங் மகளிர் பிரிவில் ஜப்பானின் இளம் வீராங்கனை மோமிஜி நிஷியா தங்கம் வென்று 13 வயதில் தங்கம் வென்ற சாம்பியன் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.

மோமிஜி நிஷியாதான் சிறு வயதில் தங்கம் வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை. 13 வயதில் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றதே ஒரு உலக சாதனை, இதில் தங்கம் வென்று மேலும் சாதனை வரலாறு படைத்துள்ளதோடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஜப்பானின் ஸ்கேட்போர்டிங் பிரிவில் முதல் தங்கப் பதக்கமாகும் இது. ஜப்பானின் ஒசாகாவைச் சேர்ந்த மோமிஜி நிஷியா மற்றொரு 13 வயது வீராங்கனையான ராய்சா லீல் என்பவரை வென்றார். நிஷியா எடுத்த ஸ்கோர் 15.26. மற்றொரு ஜப்பான் வீராங்கனையான ஃபியூனா நகயாமா 14.49 என்ற ஸ்கோர் எடுத்து வெண்கலம் வென்றார்.

நிஷியாவிடம் தோல்வி கண்ட லீல் 14.64 என்ற ஸ்கோர் எடுத்து வெள்ளி வென்றார், ஒரு ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று ஜப்பான் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னால் பார்சிலோனாவில் 14 வயதில் ஜப்பான் வீராங்கனை கியோகோ இவாசாகி நீச்சல் தங்கம் வென்றதே இளம் வீராங்கனையின் தங்கப்பதக்க சாதனையாகும்.

ஆடவர் போட்டியிலும் இதே ஜப்பான் வீரர் யூட்டோ ஹோரிகோம் இந்த விளையாட்டின் முதல் தங்கம் வென்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியதையடுத்து இப்போது மோமிஜி நிஷாயா தங்கம் வென்ற 13 வயது வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.

Views: - 263

0

0