நீங்க இங்க வந்தா, நாங்க இந்தியாவுல விளையாடுவோம்… நாங்க இல்லாம கிரிக்கெட் போட்டிய யாரு பாப்பாங்க? பாக்., கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா!

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2022, 9:44 pm
Ramiz Raja - Updatenews360
Quick Share

இந்தியாவைப் போலவே கிரிக்கெட்டை மிகவும் ஆழமாகவும் உணர்வு பூர்வமாகவும் நேசிக்கும் அண்டை நாடான பாகிஸ்தான் அதில் வெற்றி பெறும் போது தலையில் வைத்து கொண்டாடுவதும் தோல்வியை சந்திக்கும் போது கடுமையான விமர்சிப்பதும் வழக்கமாகும்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாக்., கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, பிசிசிஐ மற்றும் இந்திய அணியை சரமாரியாக தாக்கி பேசினார், ஆசிய கோப்பைக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், அடுத்த உலகக் கோப்பைக்கு பாபர் ஆசாமின் ஆட்கள் இந்தியாவுக்குப் பயணம் செய்ய மாட்டார்கள் என்று தெளிவுபடுத்தினார்

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என்றால், அதை யார் பார்ப்பார்கள்? எங்களிடம் தெளிவான நிலைப்பாடு உள்ளது: இந்திய அணி இங்கு வந்தால் உலகக் கோப்பைக்கு செல்வோம்.

அவர்கள் வரவில்லை என்றால் நாங்கள் இல்லாமல் உலகக் கோப்பையை விளையாடலாம். ஆக்கிரமிப்பு அணுகுமுறையை கடைபிடிப்போம். எங்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன், அது நாம் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே நடக்கும்.

2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினோம். டி20 ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினோம். ஒரு வருடத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு பில்லியன் டாலர் பொருளாதார அணியை இரண்டு முறை தோற்கடித்தது, ”என்று அவர் கூறினார்.

Views: - 358

0

0