என் பேர் வாஷிங்டன்… நான் டிசிக்கு போகணும்… சென்னை டெஸ்டில் ரிஷப் பண்ட்!
5 February 2021, 8:35 pmஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ரிஷப் பண்ட் , சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தரை கேலி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று துவங்கியது. இதன் முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தரை கேலி செய்ததது ஸ்பெம்ப் மைக்கில் பதிவானது. போட்டின் 70 ஆவது ஓவரின் போது வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை இங்கிலாந்து வீரர் சிப்லே எதிர்கொண்டார்.
அப்போது ரிஷப் பண்ட்,“என் பேர் வாஷிங்டன். நான் டிசிக்கு போகணும்” என தனது வழக்கமான ஸ்டைலில் கத்தினார். இது ஸ்டெம்ப் மைக்கில் பதிவானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஜோ ரூட், தனது 100 ஆவது டெஸ்டில் சதம் விளாசி அசத்தினார்.
தவிர, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது 98 ஆவது, 99 ஆவது, 100 ஆவது டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார். இந்த சதத்தின் மூலம் சர்வதேச அளவில் தனது 100 ஆவது டெஸ்டில் சதம் விளாசிய எட்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார் ரூட். மேலும் கோலின் கவ்ட்ரே, அலெக் ஸ்டூவர்ட் ஆகியோரை தொடர்ந்து தனது 100 ஆவது டெஸ்டில் இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது இங்கிலாந்து வீரரானார் ஜோ ரூட்.
0
0