இங்கிலாந்து தொடரில் புஜாரா இத்தனை பந்துகளை எதிர்கொள்வார்: ஹாக் கணிப்பு!

5 February 2021, 10:44 am
Quick Share

முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளரான பிராட் ஹாக், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் புஜாரா எத்தனை பந்துகளை எதிர்கொள்வார் என கணித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று துவங்கியது. இதில் முதலில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் புஜாரா 968 பந்துகளை எதிர்கொண்டார்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் புஜாரா எத்தனை பந்துகளை எதிர்கொள்வார் என முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளரான பிராட் ஹாக் கணித்துள்ளார். இதுகுறித்து ஹாக் கூறுகையில்,“புஜாரா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 997 பந்துகளை எதிர்கொள்வார் என நினைக்கிறேன். இந்த 4 போட்டிகளில் இவரை அவுட்டாக்குவதே இங்கிலாந்து பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனான ஜோ ரூட், புஜாராவை பாராட்டினார். இதுதொடர்பாக ரூட் கூறுகையில்,“புஜாரா மிகச்சிறந்த வீரர். அவருடன் சேர்ந்து இரண்டு போட்டிகளில் யார்க்‌ஷயர் அணிக்காக விளையாடி உள்ளேன். அவருடன் பேட்டிங் குறித்து கற்றுக்கொண்டது மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது. அவருக்கு எதிராக போட்டிகளில் விளையாடுவது ரன்கள் சேர்ப்பது அதிகமாக கற்றுக்கொள்வதற்கு மிகச்சிறந்த வாய்ப்பு. இந்திய அணிக்கு அவரின் முக்கியத்துவம் மற்றும் இந்திய அணிக்கு அவர் சேர்க்கும் வலிமை என்பது எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது. நிச்சயமாக அவரின் விக்கெட் தான் இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய விக்கெட் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” என்றார்.

Views: - 19

0

0