பஞ்சாப் அணியை பஞ்சர் ஆக்கிய சென்னை அணி : பிளே ஆஃப் வாய்ப்பை கோட்டை விட்ட பரிதாபம்!!

1 November 2020, 7:08 pm
Chennai Won- Updatenews360
Quick Share

அபுதாபி : பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் நடப்பு சீசன் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. எப்போது பிளே ஆப் சுற்றுக்கு முந்தி செல்லும் அணிகளில் சென்னை அணியும் ஒன்று. ஆனால் இந்த முறை சொதப்பல் ஆட்டத்தால் முதன் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில் நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் சென்னை அணியின் கடைசி லீக் ஆட்டம் இன்று அபுதாபியில் நடைபெற்றது. எதிரணியாக களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா சாவா என போராடி வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இந்த நிலையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, தொடக்கத்தில் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர், ஒரு பக்கம் ராகுல் தன் பக்கம் ரன் சேர்க்க, மறுமுனையில் மயங்க் அகர்வாலும் ரன் சேர்த்தனர்.

விக்கெட் போகாமல் பஞ்சாப் அணி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், நிகிடி பந்தில் இட்விக்கெட் ஆகி மயங்க அகர்வால் வெளியேற பஞ்சாப் அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது.

அடுத்தடுத்து வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற, 72 ரன்களுக்க 4 விக்கெட் இழந்து பஞ்சாப் அணி தடுமாறியது. இதையடுத்து சீராக விளையாடிய தீபக் ஹீடா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹீடாவின் வேகத்தால் பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் சேர்த்தது.

இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சென்னை அணியின் துவக்க பேட்ஸ்மேன்களான கெய்க்வாட் மற்றும் டுபிளசி அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் பொறுமையாக, நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர்.

ஒரு பக்கம் மெதுவான ஆட்டத்தை வீரர் கெய்க்வாட் வெளிப்படுத்த, டூ பிளசி அதிரடியாக ஆடினார். 34 பந்தில் 48 ரன்கள் எடுத்து டூ பிளசி அவுட் ஆனார். முதல் விக்கெட்டை 82 ரன்களுக்கு சென்னை அணி இழந்ததையடுத்து களமிறங்கிய ராயுடு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மறுமுனையில் பஞ்சாப் அணிக்கு ஆட்டம் காண்பித்த சிஎஸ்கே வீரர் கெய்க்வாட் 38 பந்தில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து 3 ஆட்டத்தில் அரைசதத்தை பூர்த்தி செய்த முதல் சிஎஸ்கே அணி வீரர் என்ற பெருமையை பெற்றார். மறுமுனையில் ராயுடு 30 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார்.

Dream11 IPL 2020: CSK provides crucial update on Ambati Rayudu's injury

இதையடுத்து இலக்கை விரைவாக எட்டிய சென்னை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி வரை அவுட் ஆகாமல் 49 பந்தில் கெய்க்வாட் 62 ரன் அடித்திருந்தார்.பஞ்சாப் அணி தோல்வியை தழுவியதால் பிளே ஆப் சுற்றுக்கு விளையாடும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.

Views: - 39

0

0