பவுலிங் சொதப்பலை சரி செய்யுமா கொல்கத்தா: இன்று பெங்களூரு அணியுடன் மோதல்!

3 May 2021, 11:14 am
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 30வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடக்கும் 30வது லீக் போட்டியில் இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் பங்கேற்ற 7 போட்டிகளில் இதுவரை வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் டெல்லி கேப்டனிடல்ஸ் அணியிடம் வெற்றியைப் பறிகொடுத்தது. மறுபுறம் புள்ளி பட்டியலில் டாப் அணிகளில் ஒரு அணியாக திகழும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஆண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்று நெருங்கி வரும் நிலையில் அதற்கான வாய்ப்பை பிரதானப்படுத்திக் கொள்ள அனைத்து அணிகளும் மும்முரம் காட்டும். இதனால் இந்த தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பெங்களூரு அணியை பொறுத்தவரையில் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை அந்த அணியின் பேட்டிங் மட்டும் பவுலிங் ஒரு சில சொதப்பல்கள் தவிர சிறப்பாகவே தற்போது வரை இருந்து வருகிறது. பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தொடரை தவிர அந்த அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது எனலாம். கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் முழுவதுமாக எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. குறிப்பாக பவுலிங்கில் மெகா சொதப்பலை சரி செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் கொல்கத்தா அணி உள்ளது.

இதற்கு முன்னதாக நடந்த முதல்கட்ட போட்டியில் கொல்கத்தா அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது. இன்றைய போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக வாய்ப்பு உள்ளதால் பெரும்பாலும் டாஸ் வென்ற கேப்டன் பவுலிங் தேர்வு செய்யவே விரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் செட்டிலாக லெவன் அணியை கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஒப்பிடும்போது பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.

Views: - 129

0

0

Leave a Reply