டூபிளசிஸ் கொடுத்த IMPACT… சிராஜின் அட்டாக் ; பெங்களூரூ அணிக்கு 3வது வெற்றி ; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!!

Author: Babu Lakshmanan
20 April 2023, 8:11 pm
Quick Share

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரூ அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – பெங்களூரூ அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக சாம் கரனும், பெங்களூரூ அணிக்கு கேப்டனாக விராட் கோலியும் செயல்பட்டுள்ளனர். டூபிளசிஸ் காயம் காரணமாக இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பெங்களூரூ அணிக்கு விராட் கோலி – டூபிளசிஸ் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்க விட்டு ரன்களை குவித்து வந்தனர்.

கோலி 59 ரன்னிலும், டூபிளசிஸ் 84 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பெங்களுரூ அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாதப் அணி வீரர்கள் பெங்களூரூ அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இம்பேக்ட் ப்ளேயரான ப்ரப்சிம்ரன் மட்டும் ஓரளவுக்கு தாக்கு பிடித்து 46 ரன்கள் சேர்த்தார்.

இதனால், பெங்களூரூ அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜிதேஷ் சர்மா அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். இதனால், கடைசி 3 ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், சிராஜின் நேர்த்தியான பந்துவீச்சால் பஞ்சாப் அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரூ அணி வெற்றி பெற்றது.

3வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரூ புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Views: - 277

0

0