வங்கதேசம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: முன்னிலை வகிக்கும் வங்கதேசம்

Author: Udayaraman
3 August 2021, 10:24 pm
Quick Share

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசம்- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 ஆட்டம் டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்கதேச அணி 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களாக அலெக்ஸ் கேரி மற்றும் ஜோஷ் பிலிப்பி களமிறங்கினர்.மெஹதி ஹசன் வீசிய முதல் பந்திலேயே கேரி ஆட்டமிழந்தார். இதன்பிறகு எந்த பேட்ஸ்மேன்களும் வங்கதேச சுழலுக்குத் தாக்கப்பிடிக்கவில்லை. மீட்செல் எந்த பேட்ஸ்மேன்கள் 10 ரன்களைக் கூட தொடவில்லை.20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வங்கதேச அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம் தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Views: - 285

0

0