கைநழுவி போன வெற்றி… மைதானத்தில் சண்டைப் போட்டுக் கொண்ட இலங்கை கேப்டன் – பயிற்சியாளர் !!

21 July 2021, 5:00 pm
srilanka - updatenews360
Quick Share

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை ஜீரணிக்க முடியாத இலங்கை அணியின் கேப்டனும், பயிற்சியாளரும் மைதானத்தில் சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த இலங்கை அணி 275 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது. ஒரு கட்டத்தில் 190 ரன்கள் என்ற நிலையில் 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

பேட்ஸ்மென்கள், ஆல்ரவுண்டர்கள் என அனைவரும் விக்கெட்டை இழந்ததால், இலங்கை அணி வெற்றி பெறும் சூழல் இருந்தது. ஆனால், 8 மற்றும் 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீபக் சாஹர் மற்றும் புவனேஸ்வர் குமார் சிறப்பாக ஆடியை அணியை வெற்றி பெறச் செய்தனர். ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்ட பந்து வீச்சாளர்கள் பின்னர் சொதப்பியதால், இலங்கை அணியின் வெற்றி கையை விட்டு நழுவியது.

போட்டியின் முடிவுக்கு பிறகு, மைதானத்தில் நின்றிருந்த இலங்கை அணியின் கேப்டன் சனாகாவுடன் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருவரும் சில விநாடிகளில் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டனர். அப்போது பயிற்சியாளர் ஆர்தரைப் பார்த்து கேப்டன் சனகா கோபமாக ஏதோ பேச, உடனே அவர் அங்கிருந்து புறப்பட்டு ஓய்வறைக்குச் சென்றுவிட்டார். இது மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“இலங்கை அணியின் கேப்டன் சனகாவுக்கும், பயிற்சியாளர் ஆர்தருக்கும் இடையிலான வாக்குவாதம் ஓய்வறையில் நடந்திருக்கலாம். இப்படி மைதானத்தில் இருவரும் வாக்குவாதம் செய்ததைத் தவிர்த்திருக்க வேண்டும்,” என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரஸல் அர்னால்ட் கருத்து தெரிவித்தார்.

Views: - 244

0

0

Leave a Reply