ஐந்து ஆண்டுக்கு பின் அரைசதம் கடந்த மேக்ஸ்வெல்: கோலி, டிவிலியர்ஸ் ஏமாற்றம்: ஐதராபாத்துக்கு 150 ரன்கள் இலக்கு!

14 April 2021, 9:12 pm
Quick Share

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னையில் நடக்க உள்ள இன்றைய லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. பெங்களூரு அணியில் தேவ்தத் படிக்கல் திரும்பினார்.

சுமாரான துவக்கம்
இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கேப்டன் கோலி, படிக்கல் துவக்கம் அளித்தனர். இதில் படிக்கல் (11) புவனேஷ்வர் வேகத்தில் விரைவாக வெளியேறினார். தொடர்ந்து வந்த சபாஷ் அஹமது (14 ) நிலைக்கவில்லை. பின் வந்த மேக்ஸ்வெல் நல்லம் கம்பெனி கொடுக்க மறுபுறம் கேப்டன் விராட் கோலி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

கோலி, டிவிலியர்ஸ் ஏமாற்றம்
இந்நிலையில் கோலி 33 ரன்கள் அடித்த போது ஹோல்டர் பந்துவீச்சில் விஜய் சங்கரின் அசத்தலான கேட்ச்சில் அவுட்டானார். தொடர்ந்து வந்த டிவிலியர்ஸ் (1) ரசித் கான் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் (8), டெனியல் கிறிஸ்டியன் (1) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் விக்கெட் மளமளவென சரிய மறுபுறம் கிளன் மேக்ஸ்வெல் கிடைத்த கேப்பில் எல்லாம் பவுண்டரிகளாக விளாசினார்.

கடைசி ஓவரில் கைல் ஜேமின்சன் (12) வெளியேறினார். தொடர்ந்து அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சுமார் 5 ஆண்டுக்கு பின் அரைசதத்தை கடந்தார். பின் அதே ஓவரில் மேக்ஸ்வெல் 1 சிக்சர் மட்டும் விளாசி கடைசி பந்தில் அவுட்டாக பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் அடித்தது.

Views: - 18

0

0