டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்த நடராஜன்… 4வது டெஸ்டிலும் தொடரும் சிராஜின் வேகம்..!!

15 January 2021, 6:42 am
nattu test - updatenews360
Quick Share

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் விளையாடி வரும் இந்திய அணியில் தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக, போட்டியில் இருந்து விலகி வருகின்றனர்.

கடந்த 3வது போட்டியில் விளையாடிய ஹனுமா விஹாரி, அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோர் இந்தப் போட்டியில் விலகினர். இதனால், இந்திய வீரர்களின் ஆடும் லெவனில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்து வந்தது.

இந்த நிலையில், பும்ராவிற்கு பதிலாக தமிழக வீரர் நடராஜனும், அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும் இடம்பிடித்துள்ளனர். ஏற்கனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் அறிமுகமான நடராஜன் தற்போது டெஸ்டிலும் அறிமுகமாகியிருப்பது தமிழக ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடராஜன் இந்திய அணிக்காக விளையாடும் 300வது டெஸ்ட் வீரராவார்.

இதனிடையே, போட்டி தொடங்கிய ஆரம்பத்திலேயே ஆஸி.,யின் தொடக்க வீரரை வார்னரை ஒரு ரன்னுக்கு ஆட்டமிழக்கச் செய்தார் சிராஜ். இதனால் 4வது டெஸ்ட்டை இந்திய அணி சிறப்பாக தொடங்கியுள்ளது.

Views: - 8

0

0