வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியருக்கு கொரோனா உறுதி: கொல்கத்தா – பெங்களூரூ போட்டி ஒத்திவைப்பு!

3 May 2021, 1:06 pm
Quick Share

கொல்கத்த அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 30வது லீக் போட்டி ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடக்கும் 30வது லீக் போட்டியில் இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சேர்ந்தவரும் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று நடக்க இருந்த 30வது ஐபிஎல் போட்டி வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இவர்கள் இருவரும் காயத்திற்கு ஸ்கேன் செய்ய பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே சென்றதால் இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கொல்கத்தா அணியைச் சேர்ந்த சில வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டி நடக்க இருக்கும் அகமதாபாத்திற்கு பிசிசிஐ அதிகாரிகளை நேரடியாக அனுப்பி உள்ளது. குஜராத் கிரிக்கெட் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ஆலோசனை செய்து இந்த போட்டியை வேறு தேதிக்கு மாற்றி வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் மாற்றியமைக்கப்பட்ட தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் விராட் கோலி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் ஒரு புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து 2-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 2 வெற்றிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

Views: - 190

0

0

Leave a Reply