மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி…! விஹாரி புஜாரா தந்த நம்பிக்கை…!

14 February 2020, 12:15 pm
Quick Share

மூன்று ஒருநாள் போட்டிகளில் படுதோல்வியடைந்ததை அடுத்து இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நியூ ஸிலாந்து அணியை மேற்கொள்கிறது. இந்த போட்டிகளில் காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா,ஷிகர் தவான்,புவனேஸ்வர் குமார் ஆகியோர் விளையாடமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது.


இந்த போட்டிகளுக்கு முன் ஒரு வார்ம் அப் மேட்ச் நேற்று இரு அணிகளுக்குமிடையே நேற்று தொடங்கியது. மிகவும் எதிர்பார்த்த இளம் வீரர்களான ப்ரித்வி ஷா மற்றும் சுப்மண் கில் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினர். அதற்குப்பின் களமிறங்கிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பண்ட் மற்றும் வ்ரிதிமான் சாஹா ஆகியோரும் ரன் எடுக்காமல் அவுட்டாகினர்.


இந்திய அணியின் டெஸ்ட் பேட்ஸ்மேன்களான ஹனுமா விஹாரி சிறப்பாக விளையாடி 101 ரன்கள் எடுத்தபின் ரிட்டையர்டு ஹர்ட் ஆகினார். மறுமுனையில் விளையாடிய சேடேஸ்வர புஜாரா 93 ரன்கள் எடுத்தபின் பெவிலியன் திரும்பினார். இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது.