ஆஸி., தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு : ஹெட்மயர், காட்ரெல்லுக்கு வாய்ப்பு

8 July 2021, 1:01 pm
west indies - updatenews360
Quick Share

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆஸ்திரேலியா அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த நிலையில், ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. உடற்தகுதி காரணமாக மார்ச்‌ மாதம்‌ இலங்கைக்கு எதிரான ஒருநாள்‌ தொடரில்‌ சேர்க்கப்படாமல்‌ இருந்த ஹெட்மையர்‌, ஷெல்டன்‌ காட்ரெல்‌, ராஸ்டன்‌ சேஸ்‌ ஆகிய மூவரும்‌ அணிக்கு மீண்டும்‌ திரும்பியுள்ளார்கள்‌.

வீரர்கள் விபரம் : பொலார்ட்‌ (கேப்டன்‌) ஷாய்‌ ஹோப்‌ (துணை கேப்டன்‌), &ஃபேபியன்‌ ஆலன்‌, டேரன்‌ பிராவோ, ராஸ்டன்‌ சேஸ்‌, காட்ரெல்‌, ஹெட்மையர்‌, ஹோல்டர்‌, அகேல்‌ ஹோசைன்‌, அல்ஸாரி ஜோசப்‌, எவின்‌ லூயிஸ்‌, ஜேசன்‌ முகமது, ஆண்டர்சன்‌ பிலிப்‌, நிகோலஸ்‌ பூரன்‌, ரொமேரியோ ஷெப்பர்ட்‌.

Views: - 440

0

0