இதெல்லாம் பல்லைக்கடித்துக்கொண்டு தாங்க வேண்டும் தம்பி: கங்குலி!

7 April 2021, 2:22 pm
Quick Share

கடந்த 2005ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பில் ஏற்பட்ட சிக்கல் குறித்து தற்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. ஆனால் இவரது கிரிக்கெட் பயணம் என்பது அவ்வளவு மிருதுவான அமையவில்லை. இதற்குக் காரணம் கடந்த 2005 ஆம் ஆண்டு இவர் கேப்டன் பொறுப்பில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தார். கேப்டன் பதவியை இழக்கும் அளவிற்கு அவரது நெருக்கடி இருந்தது. கடந்த 2000ம் ஆண்டு சவுரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

கங்குலி இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது இந்திய கிரிக்கெட் அணி மேட்ச் பிக்ஸிங் என்ற சூதாட்ட சர்ச்சையில் சிக்கித் தவித்து சின்னாபின்னமாகி இருந்தது. இதையடுத்து கடந்த 2002ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி நாட் வெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அடைந்த வெற்றி அந்த அவப்பெயரை மறைக்கும் அளவிற்கு அமைந்தது. தொடர்ந்து அடுத்த ஆண்டு கடந்த 2003ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை கங்குலி தலைமையிலான இந்திய அணி வெற்றி நடை போட்டது. அதேசமயம் கங்குலி மிகச் சிறந்த தலைவராகவும் செயல்பட்டார்.

அணியை முன்னின்று வழி நடத்திய பொறுப்பு மட்டுமல்லாமல். தங்களது முக்கியமான அணி வீரர்கள் சாதிக்காத போதும் அவர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் அரங்கில் வெற்றி வீரர்களாகத் திகழ்ந்த சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் தோனி உள்ளிட்ட பல வீரர்களை இந்திய அணிக்காக உருவாக்கிக் கொடுத்தவர் கங்குலி தான். இவரின் கிரிக்கெட் பயணத்தில் ஏற்ற இறக்கங்கள் எப்பொழுதும் சகஜமாகவே இருந்தது.

இதற்கிடையில் கடந்த 2005 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பிலிருந்து சரிவைச் சந்தித்தது எப்படி என்று குறித்து தற்போது கங்குலி பேசியுள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறுகையில், “இது போன்ற விஷயங்களை நீங்கள் கண்டிப்பாக எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அதற்கான மனநிலையை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் கிடையாது. இது விளையாட்டாக இருந்தாலும் சரி வியாபாரமாக இருந்தாலும் சரி அல்லது எந்த ஒரு துறையாக இருந்தாலும் சரி.

உங்களது பயணம் என்பது ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். இதுபோன்ற நெருக்கடியைப் பல்லைக் கடித்துக் கொண்டு நீங்கள் தாண்டி ஆகவேண்டும். நெருக்கடி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு மிகப்பெரிய அங்கமாகவே உள்ளது. ஒவ்வொருவரும் தினந்தோறும் ஒவ்வொரு விதமான நெருக்கடியை நாம் எதிர் கொண்டு தான் இருக்கிறோம். வாழ்க்கையில் ஒரு கிரிக்கெட் வீரருக்கு முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் போது உங்களை மேம்படுத்தி உங்களது திறமையை உலகிற்கு வெளிப்படுத்தக் காட்ட வேண்டும் என்ற நெருக்கடி உள்ளது.

அதேநேரம் அதிக அளவிலான போட்டிகளை எதிர்கொண்ட ஒரு வீரர் உங்களது திறமையை நிரந்தரமாக நிரூபித்துக் கொண்டே தீர வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது. ஒரு சிறு சறுக்கல் கூட மக்களின் பேச்சிலிருந்து உங்கள் தப்பவே முடியாது” என்றார்.

Views: - 2

0

0