நெல்சன் குறித்த ட்ரோல்களை நிறுத்துங்க.. ஆதரவுக்கு வந்த பிரபல நடிகர்.. !

Author: Rajesh
14 June 2022, 10:42 am
Quick Share

கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதால் கடும் ட்ரோல்களை சந்தித்தது.

பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் தற்போதும் ட்ரோல்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன விக்ரம் படம் ஹிட் ஆகி இருக்கும் நிலையில் அதற்காக நெல்சனை ஒரு தரப்பினர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ப்ரோமோ வெளியிடுவதும் மட்டும் அதிகம் creative ஆக யோசித்த நெல்சன் படத்தில் சொதப்பிவிட்டார் என நெட்டிசன் கலாய்த்த நிலையில் அதற்கு பதில் கொடுத்து நடிகர் ஆர்ஜே பாலாஜி ட்விட் செய்திருக்கிறார்.

நெல்சன் ஒரு  extraordinary இயக்குனர். அவருடன் பல ஷோக்களில் பணியாற்றி இருக்கிறேன். அவரது படங்களுக்கு பெரிய ரசிகன் நான். அவரது அடுத்த படங்கள் மூலமாக அவர் ரசிகர்களை நிச்சயம் மகிழ்விப்பார். இதை (ட்ரோல்களை) தயவுசெய்து நிறுத்துங்க’ என சுது பாலாஜி குறிப்பிட்டு இருக்கிறார்.

Views: - 383

0

0