புயல் எச்சரிக்கை.. கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு : நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2023, 3:48 pm
Moorthu
Quick Share

புயல் எச்சரிக்கை.. கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு : நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி!!

திருவள்ளூர் மாவட்டம் புயல் சின்னம் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் செல்வதால் கரை பாதிக்கப்படும் பகுதிகளான விச்சூர் வெள்ள வாயல் பகுதிகளில் கரை பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் மற்றும் ஆரணி ஆறு வெள்ள நீர் செல்லும் கரைகள் பாதிப்புக்குள்ளாகும் ஆலாடு
ஏ ரெட்டிபாளையம் பகுதிகளை பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்வையிட்டனர்.

மேலும் கூடுதலாக வெள்ள நீர் வரும் பட்சத்தில் கரைகளில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக கட்டைகளில் தடுப்பு அமைக்கவும் ஆற்றின் கரையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பபணி துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார்

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் உடன் இருந்தனர்..

Views: - 152

0

0