அக்டோபர் 2 கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி : பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2022, 12:10 pm
Grama Sabha - Updatenews360
Quick Share

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த கூட்டம் அக்டோபர் 2ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது.

டெங்கு பரவுவதை கட்டுபடுத்துதல், பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை அக்டோபர் 12ந் தேதிக்குள் அனுப்ப மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர் 2 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

மேலும் பள்ளிகளின் வளர்ச்சி, கற்றல் – கற்பித்தல் போன்றவை தொடர்பாக பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிராம சபைக் கூட்டத்தில் முன்வைக்க வேண்டும் என்றும், இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு தொடர்பாகவும் கிராம சபைக் கூட்டங்களில் விவாதிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 328

0

0