கோவையில் வீட்டின் கதவை உடைத்து 100 சவரன் கொள்ளை : உரிமையாளர் வெளியூர் சென்ற நேரத்தில் துணிகரம்!!

16 January 2021, 2:15 pm
Cbe Theft - Updatenews360
Quick Share

கோவை : கோவை ரத்தினபுரியில் வீடு ஒன்றின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 100 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 42). நெய் வியாபாரியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் பெங்களூர் சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து கார்த்திக் ரத்தினபுரி போலீசாருக்கும் தொலைபேசி வாயிலாக புகார் அளித்தார். புகாரின் பேரில் அப்பகுதிக்குச் சென்ற போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் இருந்ததாக கார்த்திக் தெரிவித்துள்ளார். அவர் பெங்களூரில் இருந்து வந்த பிறகுதான் முழு விவரம் தெரியவரும்.” என்றனர்.

Views: - 6

0

0