சவுக்கு சங்கர் மீது தாக்குதல்.. வழக்கறிஞர் போட்ட மனு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2024, 1:59 pm

சவுக்கு சங்கர் மீது தாக்குதல்.. வழக்கறிஞர் போட்ட மனு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சமீபத்தில் சவுக்கு சங்கர் யுடியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்தபோது, காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இதையடுத்து சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில் சவுக்கு சங்கரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் ஜெயிலில் பத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து அடித்துள்ளதாகவும் கோவை சிறையில் சவுக்கு சங்கரை சந்தித்த பின் அவரது வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: சவுக்கு சங்கர் மீது தாக்குதலா? பத்திரிகையாளர் தாக்கப்படுவது திமுக ஆட்சியில் சர்வசாதாரணம்.. கொந்தளித்த இபிஎஸ்..!!

கை உடைந்து விடக்கூடாது என பிளாஸ்டிக் பைப்பில் துணி சுற்றி அடித்துள்ளனர். ஆனாலும், அடி பலமாக விழுந்ததால் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வீக்கத்தை குறைப்பதற்காக ஆயின்மெண்ட் போட்டு, வலி நிவாரணி மாத்திரைகளை கொடுத்துள்ளனர்.

வலி நிவாரணி அதிகம் கொடுத்தால் அவரது கிட்னி பாதிக்கப்பட உள்ளது. சவுக்கு சங்கர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும் 10க்கும் மேற்பட்ட சிறை காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரது கண்களை கட்டிவிட்டு, குச்சியில் துணி சுற்றி காவலர்கள் அவரை தாக்கியதாக சவுக்கு சங்கர் என்னிடம் கூறினார்., என்று சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

சவுக்கு சங்கர் தரப்பில் 4 வாது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அதனை முதன்மை மாவட்ட நீதிபதிக்கு அனுப்பி வைத்த நிலையில், மாவட்ட சட்ட உதவி மையத்தில் உள்ள வழக்கறிஞர் ஆய்வு செய்ய உத்தரவு

மாவட்ட சட்ட உதவி மையத்தில் உள்ள 3 வழக்கறிஞர் , கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுடன் சிறையில் ஆய்வு செய்ய சென்றுள்ளனர்.

  • New Update Announcement From Jana Naygan team Today ஜனநாயகன் படத்தின் மாஸ் அப்டேட்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!