பட்டாசு கடையில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா : ஆய்வின்போது சிக்கிய 200 கிலோ கஞ்சா…! இருவர் கைது…

Author: kavin kumar
26 February 2022, 2:17 pm

விருதுநகர் : விருதுநகர் அருகே பட்டாசு கடையில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருகே கவலூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுரை சரக டிஐஜி அலுவகத்திற்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து மதுரை சரக டிஐஜி பொன்னி உத்தரவின் பெயரில், பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் சிவகாசி செல்லும் சாலையில் கவலூர் என்ற இடத்தில் உள்ள ஜோதி பட்டாசு கடையில் ஆய்வு நடத்தினர்.

அப்போது அந்த கடையில் 200 கிலோ மதிப்புடைய கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடையில் இருந்த மதுரையை சேர்த்த சிவசாமி மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தலைமறைவாக உள்ள சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விருதுநகரில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Comedy Actor Goundamani Wife's sudden death மனைவி திடீர் மரணம் : கதறி அழுத கவுண்டமணி…!!