நாளை முதல் 50 % இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கம் : சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

5 May 2021, 11:56 am
Diwali Spl Bus - Updatenews360
Quick Share

சென்னை : மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகப்‌ பேருந்துகள் நாளை முதல் 50 சதவிகித இருக்கைகளுடன்‌ இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில்‌ கொரோனா நோய்‌ தொற்று அதிக அளவில்‌ பரவி வருவதை தடுக்கின்ற வகையில்‌, தேசிய பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டம்‌ 2005-ன்‌ கீழ்‌, தமிழ்நாடு முழுவதும்‌ இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள்‌ அமுலில்‌ உள்ளது. அதனைத்‌ தொடர்ந்து, கடந்த 3ம் தேதி அன்று தமிழ்நாட்டில்‌ நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகளை மேலும்‌ தீவிரப்படுத்திட, 06ம் தேதி முதல்‌ புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில்‌, அரசு மற்றும்‌ தனியார்‌ பேருந்துகளில்‌ 50 சதவிகித இருக்கைகளில்‌ மட்டுமே பொதுமக்கள்‌ அமர்ந்து பயணித்திட அனுமதிக்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல்‌ மாநகர்‌ போக்குவரத்தக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ இயக்கப்படும்‌ பேருந்துகளில்‌, 50 சதவிகித இருக்கைகளில்‌ மட்டுமே பயணிகள்‌ பயணம்‌ செய்திட அனுமதிக்கப்படுவார்கள்‌. மேலும்‌, பயணரிகள்‌ உரிய முகக்கவசம்‌ அணிந்து, தனிநபர்‌ இடைவெளியினைப்‌ பின்பற்றி பாதுகாப்பான முறையில்‌ பயணம்‌ செய்யுமாறும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 149

0

0