கோவையில் 75வது சுதந்திர நாள் அமுத பெருவிழா கண்காட்சி: தியாகிகளின் புகைப்பட கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு..!!

Author: Rajesh
1 April 2022, 12:52 pm
Quick Share

கோவை: கோவை வ.உ.சி பூங்கா பகுதியில் 75 வது சுதந்திர அமுத பெருவிழா கண்காட்சி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்றது.

75வது இந்திய சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வ.உ.சி மைதானத்தில் பல்துறை பணி விளக்க கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், மற்றும் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

75வது இந்திய சுதந்திர தின பவள விழாவினையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் “சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா” நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி வரும் 6ம் தேதி வரை மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு, தேச விடுதலைக்கு வித்திட்ட வீரர்களின் புகைப்படங்கள் குறித்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கண்காட்சி நடைபெறும் நாட்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் எடுத்துரைக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

Views: - 647

0

0