அலட்சியமாக சாலையை கடக்க முயன்ற கார்… தூக்கி வீசப்பட்ட பைக் : நொடி நேரத்தில் நடந்த விபத்து.. ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
26 December 2023, 1:49 pm
acc
Quick Share

அலட்சியமாக சாலையை கடக்க முயன்ற கார்… தூக்கி வீசப்பட்ட பைக் : நொடி நேரத்தில் நடந்த விபத்து.. ஷாக் வீடியோ!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோவை சாலையில் உள்ள தனியார் டிரைவிங் ஸ்கூல் அருகே நின்று கொண்டிருந்த கார் ஓட்டுனர் ஒருவர் பின்புறம் வரும் வாகனங்களை சரியான முறையில் பார்க்காமல் வலது புறமாக தனது காரை திருப்பி சாலையை கடக்க முயன்றபோது அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் மீது மோதி எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.

இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

இந்த நிலையில் காரை ஓட்டி வந்த நபருக்கும் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டவே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் அழைத்து சென்று போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டிருந்த சத்தியமங்கலம் நகர் பகுதி முழுவதும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து பின்புறம் பாராமல் அலட்சியமாக காரை சாலையில் திருப்ப முயன்ற கார் ஓட்டுனர் மீது தவறு இருப்பதை கண்டறிந்தனர்.

இது குறித்து காவல்துறையினர் அவர்கள் இருவருக்கும் விளக்கம் அளிக்கவே அவர்கள் இருவரும் சமாதானம் அடைந்த நிலையில் இது போன்று இனிமேல் வாகனங்களை அலட்சியத்தோடு இயக்க வேண்டாம் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Views: - 380

0

0